புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாய் காயத்ரி.! எந்த சேனல் தெரியுமா?

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய நடிகை சாய் காயத்ரி தற்போது மீண்டும் விஜய் டிவியின் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நீ நான் காதல் என்கிற சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக அவர் நடிக்க இருக்கும் செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிரபல இயக்குனராக இருந்தவர் தாய் செல்வம். இவர் சில மாதங்களுக்கு முன்பு மறைந்து விட்டார். தற்போது அவரது பெயரில் தாய் கிரியேஷன்ஸ் என்கிற புது தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பாக நீ நான் காதல் என்கிற சீரியல் ஷூட்டிங் நேற்று தொடங்கியிருக்கிறது. தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் நுவ்வு நேனோ பிரேமா என்கிற சீரியலின் தமிழாக்கமே இந்த சீரியலாகும்.

புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாய் காயத்ரி.! எந்த சேனல் தெரியுமா? 1

இந்த சீரியலில் ஹீரோயினாக வர்ஷினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நாடகத்தின் தெலுங்கு பதிப்பில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் சுவாமிநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். எனவே அவரே தமிழிலும் நடிப்பாரா? அல்லது வேறு ஹீரோ நடிக்க இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியவில்லை. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி இந்த சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி மருமகளாக நடித்துக் கொண்டிருந்த சாய் காயத்ரி அந்த கதாபாத்திரம் கெட்ட கதாபாத்திரமாக மாற இருப்பதால் தன்னால் நடிக்க முடியாது என்று சொல்லி விலகி இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அதே தொலைக்காட்சியில் புது சீரியலில் நடிக்கும் வாய்ப்பை மீண்டும் விஜய் டிவி வழங்கியிருக்கிறது. சாய் காயத்ரி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே பாகம் ஒன்று மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகிய பின்னர் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த அவருக்கு தற்போது “நீ நான் காதல்” நாடகத்தின் மூலமாக மீண்டும் ஒரு என்ட்ரி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்