குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா.! இதோ வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்த மோனிஷா தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஹூண்டாய் எக்ஸ்டர் என்னும் அந்த காரை அவர் வாங்கியிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் பலரும் மோனிஷாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். யூட்யூபில் பிளாக் ஷீப் என்னும் சேனலில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் மோனிஷா. பல சீரிஸ்களில் நடித்திருக்கும் அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் இவருக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

தொடர்ந்து மோனிஷாவிற்கு பல ரசிகர்கள் உருவாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் நேற்று புது காரை ஒன்றை வாங்கி இருக்கிறேன், கடவுளுக்கு நன்றி, இது கனவு போல் இருக்கிறது, ஏனென்றால் மிடில் கிளாஸில் பிறந்த பெண்ணுக்கு இது நிச்சயம் பெரிய விஷயம்தான். சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை செகண்ட் ஹேண்டில் ஒரு கார் ஒன்றை வாங்கினார். அது ஆங்காங்கே நின்று போகும். எல்லாரும் சேர்ந்து தள்ளி தள்ளி ஸ்டார்ட் பண்ணுவோம், அப்புறம் அது சுத்தமா ஓடல, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு செகண்ட் ஹேண்டில் நானோ கார் வாங்கினோம். அதை பார்த்து பலர் சிரிச்சாங்க.

தொடர்புடையவை  எல்லாரும் கைய தூக்குங்க ..! மாணவர்களுக்கு நடனம் சொல்லி கொடுக்கும் நாட்டிய சிகாமணி விஜயா ..!

குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா.! இதோ வீடியோ.! 3

விளம்பரம்

சில பேர் அதை காரா கூட மதிக்க மாட்டாங்க. ஆனா நாங்க அதை வச்சு ரொம்ப சந்தோசமா இருந்தோம். அந்த கார் கிடைச்சது நினைச்சு மகிழ்ச்சியா இருந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களுடைய ஆதரவுனால நான் இந்த காரை வாங்கி இருக்கேன். புது கார் வாங்கணும் என்கிறது என்னுடைய ரொம்ப நாள் ஆசை. கடைசியா அது நடந்திருக்கு. கடவுளுக்கு நன்றி. என்னுடைய மனது அன்பால் நிரம்பி வழிகிறது என்று சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். பலரும் புது கார் வாங்கிய மோனிஷாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.! நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

View this post on Instagram

 

A post shared by Monisha Blessy B (@monisha.blessy)

விளம்பரம்

Video Credits: Monisha Blessy

விளம்பரம்

Leave a Comment