பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே முல்லை கதாபாத்திரம் 3 முறை மாற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த கதாபாத்திரமும் நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடித்து வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் தற்போது தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். குடும்பப் பாங்கான தொடரை எடுப்பதில் விஜய் டிவி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி என குடும்பத்தின் அருமையை சொல்லும் தொடர் கதைகளை எடுத்து வருகிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார். அந்த தகவல் கிடைத்திருக்கிறது தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஏதாவது ஒரு விலகல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்தில் கண்ணனுக்கு ஜோடியாக வைஷாலி என்கிறவர் நடித்து வந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு விஜே தீபிகா நடித்து வந்தார். அவருக்கு முகத்தில் அதிகமாக பரு இருந்ததால் அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். அடுத்ததாக முல்லை கதாபாத்திரத்தில் சித்து இறந்துவிட்ட காரணத்தினால் காவியா அறிவுமணி நடித்து வந்தார். பின்னர் அவரும் விலகி விட்டதால் தற்போது லாவண்யா நடித்து வருகிறார். அடுத்ததாக மூர்த்தியின் தாயாக நடித்து வந்தவரின் கதாபாத்திரத்தை திடீரென முடித்திருந்தனர். அவரும் இந்த நாடகத்தில் இருந்து விலகி பாக்கியலட்சுமி நாடகத்திற்கு சென்று விட்டார். பின்னர் மூர்த்திக்கு மாமா கதாபாத்திரத்தில் வந்த நெல்லை சிவாவும் இறந்து விட அந்த கதாபாத்திரத்தில் தற்போது இன்னொருவர் நடித்து வருகிறார்.
பின்னர் பிரசாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் வசந்த் இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்தார். அவரும் இந்த சீரியலில் இருந்து விலகி விட அவருக்கு பதிலாக மகேஷ் சுப்ரமணியம் என்பவர் நடித்து வருகிறார். இது போல தொடர்ந்து இந்த சீரியலில் இருந்து விலகல்கள் நடந்து கொண்டே இருக்க, தற்போது மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்திரி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக முன்பு முகத்தில் பருக்கள் இருந்த காரணத்தால் நீக்கப்பட்ட விஜே தீபிகாவே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜே தீபிகாவும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் சரவணனும் ஏற்கனவே காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் விஜே தீபிகாவே ஐஸ்வர்யாவாக களம் இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.