நடிகை சாய் பல்லவியின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தில் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். பின்னர் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். திரும்பி வந்த அவர் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அவர் நடித்த முதல் படம் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம். இந்த படத்தில் மலர் டீச்சராக பலரது உள்ளங்களை கவர்ந்திருப்பார். முதல் படத்திலேயே லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் சாய் பல்லவி. தற்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அவர் நடித்து வருகிறார். கார்கி என்ற படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பேன் என்று சாய் பல்லவி கூறி வருகிறார்.மலையாளம், தமிழை காட்டிலும் அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மிக அதிகமாக உள்ளனர்.
தெலுங்கு படங்களுக்கு ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபடும்போது சாய்பல்லவி என பெயரைச் சொன்னாலே அரங்கம் அதிரும் அளவிற்கு கூச்சலும் கைத்தட்டலும் வானை விஞ்சி விடுகிறது. அந்த அளவிற்கு சாய் பல்லவி மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கின்றனர் தெலுங்கு ரசிகர்கள். டிகை சாய் பல்லவியின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் சாய் பல்லவியா இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.