Categories: சினிமா

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் டப்பிங் பேசும் சாய்பல்லவி..வேற லெவல் Dedication | Sai Pallavi

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின்னாளில் திரைப்படத்துறையில் கால் பதித்தவர்தான் சாய்பல்லவி. நடனக் கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கி பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் “மலர் டீச்சர்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ், மலையாள ரசிகர்களின் உங்களைக் கொள்ளைக் கொண்டார். பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவரும் கூட. தமிழில் தனுஷ் – சாய்பல்லவி நடித்து வெளியான ரவுடி பேபி பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது.

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் டப்பிங் பேசும் சாய்பல்லவி..வேற லெவல் Dedication | Sai Pallavi 1

சாய் பல்லவி தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வருகிறார். அந்த வகையில் அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்த சாய் பல்லவியின் பெயரை சொன்னதுமே ரசிகர்கள் கத்த ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். தற்போது கார்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகயுள்ளது. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

இந்த படம் குறித்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மூன்று மொழிகளிலும் டப்பிங் பேசுவது போன்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் சில காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில் கன்னடம் மொழி டப்பிங் பேசும் போது தட்டுத்தடுமாறி பேசுகிறார். இதை பார்த்த சாய் பல்லவி ரசிகர்கள், ஒரு மொழியை கற்றுக் கொண்டு அதில் தானே டப்பிங் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களே உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்று கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்