Categories: சினிமா

“இவர தான் காதலிக்கிறேன்”.! தனது காதலரை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன்..!

வெளியிட்டது

பிரபல திரைப்பட நடிகையாக இருக்கும் சாய்பல்லவியின் தங்கை தனது காதலரை அறிமுகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தன் அக்காவிற்கு முன்னதாகவே திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். தமிழின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்கிற நடன நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இவர தான் காதலிக்கிறேன்".! தனது காதலரை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன்..! 1

ஆனால் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது ‘பிரேமம்’ திரைப்படம் தான். மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. ‘பிரேமம்’ படத்திற்குப் பின்னர் அவர் நடிப்பில் வெளியான ‘காளி’, ‘மாரி 2’ ‘என்ஜிகே’, ‘பாவக்கதைகள்’, ‘ஷாம் சிங்காராய்’, ‘விராட பருவம்’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கடைசியாக தமிழில் அவர் நடிப்பில் வெளியான ‘கார்கி’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தது. தொடர்ந்து தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘தண்டல்’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவரின் தங்கை பூஜா கண்ணன் இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.


சாய்பல்லவி போலவே இவரும் கதாநாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு படத்துடன் திரைத்துறையிலிருந்து விலகி விட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா தற்போது தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அவர் பெயர் வினீத் என்றும், என்னுடைய சூரிய கதிர்வீச்சு இவர்தான் என்றும், என்னுடைய க்ரைம் பார்ட்னர் தற்போது என்னுடைய பார்ட்னராக மாறிவிட்டார் என்றும் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்