கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட சாய் பல்லவி!

வெளியிட்டது

தற்போதுள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் , தமிழ் படங்களை மட்டும் பார்ப்பதில்லை , மற்ற மொழி படங்களையும் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களை ஈற்பதும் உண்டு. அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு படங்களின் ரசிகர்களையும் அதிகளவில் கவர்ந்த திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.

கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட சாய் பல்லவி! 1

என்னதான் இந்த படத்திற்கு முன்பு ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் , இந்த படத்தில் தான் மக்களால் பெரியளவில் அறியப்பட்டார் சாய்பல்லவி. இவர் இன்று பிரபலமான ஹீரோயினாக இருப்பதற்கு இந்த படமும் ஒரு முக்கிய காரணம். இதன் பிறகு தமிழில் தியா, மாரி 2 , NGK ஆகிய படங்களில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அது போக தெலுங்கிலும் பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார் சாய் பல்லவி.

மேலும் பல படங்களில் நடிக்க இருக்கிறார் சாய் பல்லவி. சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து இன்று பிசியாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இந்நிலையில் தற்போது சாய் பல்லவி கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோடானகோடி ரசிகர்கள் இருக்கும் சச்சின் டெண்டுல்கருடன் சாய் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாய் பல்லவி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்