Categories: சினிமா

விஜய் தேவாரகொண்டாவுடன் எந்த படத்திலும் நடிக்க போவதில்லை – அதிரடி காட்டிய சாய் பல்லவி, என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. இவர் பிறப்பால் தமிழராக இருந்த போதிலும் இவருக்கு முகம் கொடுத்தது என்னவோ மலையாள சினிமா தான். மலையாளத்தில் பல இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்ந்த பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி தமிழ் இளைஞர்களையும், மலையாள இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இதற்கு பின்னர் அவருக்கு தொடர்ந்து பல படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்த அவர் பின்னர் தொலைக்காட்சிகளை விட்டுவிட்டு மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு சென்றார். ஆனாலும் திரைத்துறையின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக அவர் மீண்டும் வந்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். நடனத்திலும் நடிப்பிலும் மிக புகழ்பெற்று இருக்கும் அவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

விஜய் தேவாரகொண்டாவுடன் எந்த படத்திலும் நடிக்க போவதில்லை - அதிரடி காட்டிய சாய் பல்லவி, என்ன காரணம் தெரியுமா? 1

 

தமிழ் மலையாள ரசிகர்களை விட, தற்போது அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். தெலுங்கு படம் பலவற்றில் கமிட்டாகி நடித்து வருகிறார். சாய் பல்லவி தெலுங்கு முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஏறக்குறைய நடித்து விட்டார். ஆனால் ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி கூறியிருக்கும் கருத்து தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகர் விஜய் தேவாரகொண்டா தான். அவருடன் எந்த சூழ்நிலையும் தான் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி அறிவித்திருக்கிறார். குடும்ப பங்கான கதைகளில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும், பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் சாய் பல்லவி ஏற்கனவே தனது பேட்டிகளில் கூறியிருந்தார். அவர் நடிப்பில் வெளியான கார்கி, பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு படமாக இருந்தது. அந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் சாய்பல்லவி விஜய் தேவார கொண்டாவுடன் நடிக்க மாட்டேன் என்பதற்கு காரணத்தையும் கூறியிருக்கிறார்.

விஜய் தேவாரகொண்டா நடித்து வெளியாகி இருந்த படம் தான் டியர் காம்ரேட். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் சாய்பல்லவியை தான் அணுகியுள்ளனர். ஆனால் அதிக அளவில் முத்த காட்சிகள் இருந்ததாலும், விஜய் தேவார கொண்டா படங்களில் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாலும் அவருடன் நடிக்கப் போவதில்லை என்று சாய் பல்லவி முடிவு செய்திருந்தார். அதன்படி அந்த படம் மட்டுமல்லாமல் வேறு எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று சாய்பல்லவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்