விஜய் கூட நீ நடித்த 3 படங்களும் பிளாப்! அதற்கு யோகிபாபு கொடுத்த பதிலடி !

விஜய் தற்போது தன்னுடைய அடுத்த படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும் இந்த படம், வம்ஷி படிப்படிள்ளி என்பவர் இயக்கத்தில், ரஷ்மிகா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்க மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இப்பொது இந்த படத்தில் நடிகர் யோகிபாபுவும் இணைந்துள்ளார் என அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் யோகிபாபு பகிர்ந்துள்ளார்.

விளம்பரம்

இது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 4வது முறையாக நடிகர் விஜயுடன் யோகிபாபு இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளார். பலரும் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், சிலர் இதனை கலாய்த்தும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த கூட்டணியை வைத்து உருவான 3 படங்கள் சர்க்கார்,பீகில், பீஸ்ட் என மூன்று படங்களிலும் தோல்வி சந்திக்க , அந்த படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, நெல்சன் போன்றோர் அந்த படங்களின் மூலம் காலியானார்கள். இப்போது  அதை அடுத்த படத்திலும் தொடர்கிறீர்கள்…சூப்பர் என கூறி நெட்டிசன் ஒரு கமெண்ட் செய்ய அதற்கு யோகிபாபு நக்கலாக நன்றி என பதிலத்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  போடோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைக் கொண்டாட பிரதமர் மோடி இன்று அசாம் செல்கிறார்

விஜய் கூட நீ நடித்த 3 படங்களும் பிளாப்! அதற்கு யோகிபாபு கொடுத்த பதிலடி ! 1

உண்மையில் யோகிபாபு விஜயுடன் 4 படங்களில் நடித்துள்ளார்,  மெர்சல்,சர்க்கார்,பிகில்,பீஸ்ட். இதில் படங்கள் கலவையான விமர்சங்களை பெற்றாலும் அனைத்து  படங்களும் நல்ல வசூலை குவித்தது நிதர்சனமான  உண்மை. ரசிகர்களுக்கும் இந்த கூட்டணி பிடித்துள்ளது என்பதால் தொடர்ந்து இவர்கள் இணைத்து பணியாற்றி வருகிறார்கள்.

விளம்பரம்

ஆனால் இதனை பற்றி பேருடாக எடுத்துக்கொள்ளாமல், யோகிபாபு நடிகர் விஜயுடன் ஹைதராபாதில் நடக்கும் படிப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். படம் மும்முரமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு தமன் இசைமயக்க, தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே பிரமானந்தமும் உள்ளதால் படத்தில் காமெடியிற்கு  பஞ்சம் இருக்காது.

விளம்பரம்

Link-Yogibabu twitter handle

விளம்பரம்

Leave a Comment