“நீ அவளோ Worth’ஏ இல்ல”!!உன்னால சைதன்யா தேவதாஸாக அலையுறான்?!!சமந்தாவை திட்டி கொச்சையாக பதிவிட்டுள்ள நபர்!!Thug Life பதிலடி கொடுத்த சமந்தா!!

வெளியிட்டது

"நீ அவளோ Worth'ஏ இல்ல"!!உன்னால சைதன்யா தேவதாஸாக அலையுறான்?!!சமந்தாவை திட்டி கொச்சையாக பதிவிட்டுள்ள நபர்!!Thug Life பதிலடி கொடுத்த சமந்தா!! 1

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகையாக தொடர்ந்து நீடித்து வருபவர் நடிகை சமந்தா. சினிமா பின்புலம் கொஞ்சமும் இல்லாமல், தனக்காகவே முயன்று இவ்வளவு பெரிய இடத்தை தானாகவே முயன்று சாதித்துள்ளார். தமிழில் வெளியான மஸ்கொவின் காவேரி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தெலுங்கில் தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் அந்த மொழி வேர்ஷனில் நாயகையாக நடித்து இருந்தார்.

முதல் படத்திலேயே தெலுங்கில் முத்திரை பதித்த இவர் தொடர்ந்து அங்கு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த “பிருந்தாவனம்” படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க, சிலர் இவருடைய சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி ராஜமௌலின் “நான் ஈ” படத்தில் கதையின் நாயகையாக நடித்து பாராட்டுகளும் விருதுகளையும் வென்று குவித்தார்.

இந்த ஒரே படம் இவரை மிக பெரிய உச்சத்திற்கு இரண்டு மொழி திரையுலகிலும் முக்கிய நாயகியாக மாற்றியது. அடுத்தடுத்து தெலுங்கிலுள்ள முன்னணி நாயகர்கள் பலருடனும் தொடர்ந்து நடித்தார். பவன் கல்யாண்,  மகேஷ் பாபு, நாகா சைதன்யா, நானி தமிழில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் என அனைவருடனும் நடித்தாலும் அனைத்துமே தேர்ந்தெடுத்து நடித்த கதாபத்திரங்களே.

அறிமுகமான நாக சைதன்யாவுடனே காதல் ஏற்பட பெற்றோர்கள் மத்தியில், மிக பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தின் மூலம், தெலுங்கு தேசத்தின் உச்ச நாயகியாக மாறிப்போனார். 4 ஆண்டுகள் திருமண வாழ்விற்கு பிறகு திடீரென இருவரும் பிரச்சனையை பற்றி கூறாமல், விவாகரத்து பெற்றனர். இது மிக பெரிய அதிர்ச்சியை சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்தது.

விவகாரத்திக்கு பின், இவருடைய சினிமா வாழ்க்கை அவ்ளோதான் என பேசிய அனைவர்க்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்தியாவின் நம்பர் 1 தொடரான “தி பேமிலி மேன் 2” தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். அதற்கு நடுவில், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரே பாடலுக்கு நடனம் ஆடி, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார்.

இப்பொது இவர் விஜய் தேவரைக்கொண்டவுடன் ஒரு படம், ஆங்கிலத்தில் வெப் தொடர் ஒன்று, ஹிந்தி வெப் தொடர் ஒன்று என பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடரப்படும் இந்திய நாயகிகளில் இவர் முன்னனியில் இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தியும், தனியார் பொருட்டுகளை விளம்பரம் செய்தும் பதிவிட்டு வருகிறார்.

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், வர வர கொஞ்சம் கிளாமராகவே புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தனியார் பொருட்களை விளம்பரம் படுத்தவும் , தன்னை மீண்டும் முன்னணி நடிகையாக காட்டிக்கொள்ள இவர் இதனை பயன்படுத்தினாலும், இது அவருக்கு சில ரசிகர்களிடமே நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்துள்ளது. ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் மென்மேலும் செய்து வருகிறார். அது அவருக்கு சில முன்னணி நடிகர்கள் பாலிவுட்டில் கிடைக்கும் வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர் தெலுங்கில், மிகவும் கொச்சையாக அவரை விபச்சாரி எனவும், துணிகளை விற்றுவிடு எனவும், உனக்காக நாகசைதன்யா தேவதாஸாக அலைய வேண்டுமா எனவும்” கொஞ்சம் கீழ்தரமாகவே பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நடிகை சமந்தா அந்த பதிவை ஷேர் செய்து, உங்களை பார்த்து நான் மிகவும் பயப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார் நக்கலாக. இது இப்பொது வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்