சாம் விஷால் பிறந்த நாளுக்காக சிவாங்கி சர்ப்ரைஸ் ஒன்றை செய்துள்ளார். சாம் விஷாலுக்கு தெரியாமல் கேக் ஒன்றை வாங்கி வெட்டி இருக்கிறார் சிவாங்கி. அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. சின்ன திரையில் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோவாக இருப்பது சூப்பர் சிங்கர். இது பல பாடகர்களை உருவாக்கியிருக்கிறது. இதில் சீசன் 6 முக்கியமான போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் தான் சாம் விஷால் மற்றும் சிவாங்கி. இருவரும் மிகப் பிரமாதமாக பாடும் திறமை கொண்டவர்கள். இந்த சீசனின் போது இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அப்போது இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் சிவாங்கி மற்றும் சாம் விஷால் இருவருமே நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று விளக்கம் அளித்தனர்.

ஆனாலும் ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து வதந்தியை கிளப்பி வந்தனர். பின்னர் இந்த சர்சைகள் எல்லாம் ஓய்ந்தது. சூப்பர் சிங்கருக்குப் பிறகு சாம் விஷால் மிகவும் பிஸியாகிவிட்டார். அவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டபோது குட்டி ஸ்டோரி என்கிற பாடலை தெலுங்கில் சாம் விஷால் தான் பாடினார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார். இங்கு இவர் இறுதி வரை வெற்றி வந்தார். ஆனால் இவரால் வெற்றி பெற முடியவில்லை .அங்கு பெண்கள் அனைவரின் மனதையும் பாடியே இடம் பிடித்தார். மேலும் சித் ஸ்ரீராம் பாடிய என்னடி மாயாவி என்ற பாடலை மிகவும் தத்ரூபமாக பாடுவார் சாம் விஷால்.
ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சித் ஸ்ரீராம் முன்னிலையில் அந்த பாடலை பாடி காட்டினார். இவர் பாடியதை கேட்டு வாயடைத்துப் போனார் சித் ஸ்ரீராம். சாமை வெகுவாக பாராட்டினார். இந்த நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் பிசியாக இருக்கும் சாம் விஷாலுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவரது நெருங்கிய தோழியான சிவாங்கி அவருக்கு தெரியாமல் கேக் ஒன்றை வாங்கி சர்ப்ரைஸ் ஆக கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது..நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Manasi Addict