தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா அக்கினேனி. பல முன்னனி நடிகர்களுடன் சிறப்பாக நடித்து மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவர். தற்போது இவர் ‘சகுந்தலம்’ தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதி உடன் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஃபோட்டோ வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு டுவிட்டர், முகநூல் என அனைத்து சமூக வலைத்தளங்களில் உள்ள தன் கணக்கில் இருந்து ‘அக்கினேனி’ என்ற அவர் குடும்பப் பெயரை நீக்கியது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு இருக்கிறதாக பொய்யான தகவல்கள் பரவி வந்தது. மேலும் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்ற வதந்திகள் வேகமாக பரவி வருவதால் ரசிகர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். இருவரிடம் மௌனம் சாதித்தார்கள்.
இந்நிலையில் மீண்டும் அவருடைய பெயரை நீக்கி விட்டு ‘எஸ்’ என்று டுவிட்டர், ஃபேஸ்புக் அக்கவுண்டில் வைத்துக் கொண்டார். இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. ‘அக்கினேனி’ என்பது சமூகப்பிரிவின் பெயர் என்பதாலும் அது தன் பெயரில் இருக்க வேண்டாம் என்பதால் இவ்வாறு பெயரை மாற்றியுள்ளார் என்றும் ஒரு புறம் கூறப்படுகிறது.