தமிழ் சினிமாவில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சாண்டி. நடனத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் நடனமாடுபவர்களுக்கு நடனம் சொல்லி கொடுத்து வந்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு தேடிய இவருக்கு ஆ என்ற படத்தில் நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி கொண்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

தற்போது பல முன்னணி நடிகர்ளின் படங்களுக்கும் இவர் தன நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் நடன இயக்குனராக மட்டுமின்றி தற்போது சினிமாவில் நடிக்கவும் தொடங்கிவிட்டார் சாண்டி மாஸ்டர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின் தான் சாண்டி மிகவும் பிரபலமானவராக உருவெடுத்து உள்ளார்.
தற்போது இவரின் மகளின் 6வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் சாண்டி. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் மகளுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.