மறைந்த பிரபல தமிழ் சினிமா இயக்குனர்..! உதவிகேட்டு நின்ற குடும்பம்..! ஓடிவந்து உதவிய நடிகர் Sivakarthikeyan..!

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் ஜொலிப்பது எனலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கான கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி உள்ளார்.

மறைந்த பிரபல தமிழ் சினிமா இயக்குனர்..! உதவிகேட்டு நின்ற குடும்பம்..! ஓடிவந்து உதவிய நடிகர் Sivakarthikeyan..! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக அமரன் படம் வெளியாக உள்ளது. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகி சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவர் தற்போது மறைந்த இயக்குனர் ராசுமதுரவன் குடும்பத்திற்கு உதவி செய்து உள்ளார். மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் மற்றும் முத்துக்கு முத்தாக என்ற படங்களை இயக்கியவர் தான் ராசு மதுரவன்.

மறைந்த பிரபல தமிழ் சினிமா இயக்குனர்..! உதவிகேட்டு நின்ற குடும்பம்..! ஓடிவந்து உதவிய நடிகர் Sivakarthikeyan..! 3

விளம்பரம்

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், பள்ளி படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் அவரது குடும்பம் தவித்து வந்து உள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன், ராசு மதுரவன் மகள்கள் இருவரது ஸ்கூல் பீஸ் 97 ஆயிரம் ரூபாயை செலுத்தி உதவி செய்து உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment