நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும், ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவும் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலமாக நடன இயக்குனராக அறிமுகம் ஆனவர் சாண்டி மாஸ்டர். இவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சென்னையில் ஒரு நடன பள்ளியையும் வைத்து நடத்தி வருகிறார். அங்கு ஏழை குழந்தைகளுக்கு இவர் இலவசமாக நடனமும் சொல்லிக் கொடுக்கிறார். சாண்டியை நடன இயக்குனராக அறியப்பட்டதை விட பிக்பாஸில் ஒரு போட்டியாளராக அறியப்பட்டது தான் அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சாண்டி மக்களின் ஆதரவை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் இரண்டாவது இடத்தை பெற்றார். சாண்டியால்தான் பிக்பாஸ் சீசன் 3 மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்று கூறலாம். அதற்கு பின்வந்த பிக்பாஸ் சீசன்கள் எதுவும் அந்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ்க்கு பின்னர் சாண்டிக்கு பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி அடைந்த விக்ரம் படத்தில் கூட சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
இந்த நிலையில் சாண்டிக்கு கார்த்திக் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல தனது கோரியோகிராப்பால் பலரின் மனங்களை வென்றுள்ளார் சாண்டி. அதிதி கார்த்தியின் நடன அசைவுகளைப் போலவே பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்குசாண்டி டான்ஸ் சொல்லிக் கொடுப்பது போல வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் சாண்டிக்கு ஈடு கொடுத்து மரண குத்தாட்டம் போடுகிறார் இந்திரஜா.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது..நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..