சஞ்சீவ் அம்மாவின் 55வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சஞ்சீவ் ஆலியா தம்பதிகள் .!

வெளியிட்டது

பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிகள் தற்போது சஞ்சீவின் தாயாரின் பிறந்தநாளையும் மாலத்தீவில் வைத்து கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது அவர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக கலக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். இவர்கள் இருவரும் எது செய்தாலும் அது வைரல் ஆகிவிடுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது சஞ்சீவின் தாயார் ஹசானாவின் பிறந்தநாளை மாலத்தீவில் வைத்து கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோவை சந்தித்தது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். குளிர் 100 டிகிரி என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் சஞ்சீவ். வெள்ளித்திரை இவருக்கு கை கொடுக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் அம்மாவின் 55வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சஞ்சீவ் ஆலியா தம்பதிகள் .! 1
இந்த நாடகத்தின் மூலமாக பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட சஞ்சீவ் அதே நாடகத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஆலியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆலியாவின் வீட்டில் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வீட்டின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஐலா மற்றும் அர்ஷ் இருவரும் பார்ப்பதற்கு பொம்மை போல இருப்பார்கள். இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று உள்ளனர். ஆலியாவின் இளைய மகன் அர்ஷுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக மாலத் தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியானது.

இந்த நிலையில் இன்று சஞ்சீவின் தயாருக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய அவர்கள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு தற்போது மாலத்தீவில் இருந்து சென்னைக்கு கிளம்பி இருக்கின்றனர். அந்த அழகிய வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Sanjev & Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்