Categories: சினிமா

காமெடியில் பட்டையைக் கிளப்பி இருக்கும் சந்தானம்.! “80ஸ் பில்டப்” ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

சந்தானம் நடித்துள்ள ‘80ஸ் பில்டப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. சின்னத்திரையில் காமெடி நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வெள்ளித் திரையில் மிகப்பெரிய ஸ்டாராக உயர்ந்திருப்பவர் தான் நடிகர் சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபாவில்’ காமெடியனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பல படங்களில் ஹீரோவின் நண்பனாக துணை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 2002ம் ஆண்டு வெளியான ‘பேசாத கண் பேசுமே’ என்கிற படத்தில் நடிகர் விக்ரமின் வகுப்பு தோழனாக நடிக்க ஆரம்பித்த அவர், பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ மற்றும் ‘கிக்’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காமெடியில் பட்டையைக் கிளப்பி இருக்கும் சந்தானம்.! "80ஸ் பில்டப்" ட்ரைலர் வெளியானது.! 1
தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மற்றும் ‘80ஸ் பில்டப்’ என்கிற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘80ஸ் பில்டப்’ திரைப்படம் தற்போது படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. வருகிற நவம்பர் 24ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 80 காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கல்யாண் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், தங்கதுரை என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சன் தொலைக்காட்சியில் ‘பூவே உனக்காக’ சீரியலில் நடித்த ராதிகா பீர்த்தி நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமி கடைசியாக நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Junglee Music Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்