எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவர் இணைய இருக்கும் செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. விரைவில் அவர் அந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ப்ரோமோவை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏற்கனவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். தற்போது கதைப்படி அப்பத்தாவின் 40% பங்குகளை ஜீவானந்தம் பறித்துக் கொண்டார். ஜீவானந்தம் ஜனனியின் ஆள் என்று ஆதி குணசேகரன் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஜனனியும் ஜீவானந்தம் ஆதி குணசேகரன் வைத்து இருக்கும் ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரம் தற்போது கதைக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறது. இதனால் கதை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இத்தனை நாள் ஜனனியை தனது எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆதி குணசேகரனுக்கு தற்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. உண்மையில் ஜீவானந்தம் தான் ஆதி குணசேகரனுக்கு எதிரி. தனது சொத்தை அபகரிக்க நினைக்கிறார் என்று சொல்லி இத்தனை நாள் ஆதி குணசேகரன் ஜனனி மீது கோபப்பட்டு கொண்டிருந்தார். தற்போது அவருக்கு அதிர்ச்சியாக ஜனனிக்கும் ஜீவானந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. அதே போல் ஜனனிக்கும் ஜீவானந்தம் ஆதி குணசேகரனின் ஆள் இல்லை என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. கதை இப்படியான விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிற நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் புதிய என்ட்ரி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ்.
90ஸ் கிட்ஸ்களின் மிக ஃபேவரைட் வில்லியாக இருப்பவர் சாந்தி வில்லியம்ஸ். ஆனால் இவர் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்து வருகிறார். எனவே தற்போது அவர் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் எதிர்நீச்சலில் அவருக்கு நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிகிறது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்? ஆதி குணசேகரனுக்கு வில்லியாக சரியான போட்டியாக இருப்பாரா என்பது குறித்து தெரியவில்லை. விரைவில் சாந்தி வில்லியம்ஸ் என்ட்ரி ஆகும் அந்த ப்ரோமோ வெளியாகும் என்று தெரிகிறது. சாந்தி வில்லியம்ஸ் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, மகராசி, தென்றல் போன்ற பல நாடகங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..!