சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது தர்ஷினி ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ஒரு புது யுத்தியை கையாளுகிறார். இதனால் தர்ஷினி விரைவில் தப்பித்துவிடுவார் என்று தெரிகிறது. இன்னொரு புறம் சக்தியை மருத்துவமனையில் விட்டு விட்டு மருமகள்கள் அனைவரும் தர்ஷினியை தேடுவதற்காக கிளம்புகின்றனர். ஈஸ்வரி காரை ஒட்டி செல்ல, ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகிய நால்வரும் தர்ஷனியைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது கதைப்படி தர்ஷினியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திக் கொண்டு சென்று விடுகின்றனர். அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்கிற விவரம் எதுவுமே தெரியவில்லை. இந்த நிலையில் தர்ஷினியை தேடி சென்று கொண்டிருந்த சக்தி மீது கார் மோதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தர்ஷினியை தேடுவதில் சிறிது சுணக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரை தேடி மருமகள் செல்கின்றனர் சக்தி தன்னை பார்த்துக் கொள்வதாகவும், தர்ஷினியை முதலில் தேடி கண்டுபிடிக்குமாறு கூற ஈஸ்வரி காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மற்ற மருமகளும் அவருடன் செல்கின்றனர்.

மறுபுறம் தர்ஷினி தன்னுடைய பையில் இருந்து பேப்பரை எடுத்து அதில் எழுதி ஜன்னல் வழியாக தெருவில் வீசிக் கொண்டிருக்கிறார். எனவே விரைவில் தர்ஷினி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அவரை காப்பாற்றி அழைத்து வருவார்கள் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV