ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? உழைச்சா தான் சோறு கிடைக்கும்.! Thug Life செய்த கோபி.!

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி வரும் நிலையில், தற்போது அது குறித்து ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வரும் கோபி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ‘பாக்கியலட்சுமி’ தொடரில் கோபி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சதீஷ். இவர் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? உழைச்சா தான் சோறு கிடைக்கும்.! Thug Life செய்த கோபி.! 1
தற்போது கதைப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பிஸியாக ஷூட்டிங் கலந்து கொண்டிருக்கிறார் சதீஷ். அது குறித்து வீடியோவில் பேசி இருக்கும் அவர், “சங்கமம் முடிந்து மூன்று நாட்கள் நன்றாக தூங்கலாம் என்று பார்த்தால் வைரல் காய்ச்சல் வந்துவிட்டது. அதனால் உடல்நிலை எனக்கு கொஞ்சம் சரியில்லை. நாட்டில் பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. ராமன் ஆண்டாலும், ராவணனின் ஆண்டாலும் நாம் உழைத்தால் தான் நமக்கு சோறு. வேற யாரும் நமக்கு சோறு தரமாட்டான். மைக்கை எடுத்து பேசினா மட்டும் போதாது. உழைத்து சாப்பிடணும். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்” என கூறி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பயமா இருக்கா இனிமே பயங்கரமா இருக்கும்..! குக்குகளை மரணமாக கலாய்க்கும் வெங்கடேஷ் பட்

ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? உழைச்சா தான் சோறு கிடைக்கும்.! Thug Life செய்த கோபி.! 3
அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ராமர் கோவில் தேவையா? தேவையில்லையா? என்று விவாதித்து வரும் நிலையில், தற்போது அது குறித்து கோபி பேசியிருக்கும் காணொளி இணையத்தில் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. பலரும் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment