தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானார் ழசில காலம் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் பின் நாட்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்க தொடங்கினார். பெரும்பாலும் கதாநாயகர்களின் அன்னை வேடங்களில் நடித்த தொடங்கினார். இது அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. குறிப்பாக ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் இவர் கதாநாயகர்களின் அம்மாவாக நடித்து புகழ்பெற்றார். இதனால் அவருக்கு குணச்சித்திர நடிகைக்கான பல விருதுகள் கிடைத்துள்ளன. தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் திறமையாலும் பல விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரண்யா பொன்வண்ணன் முதலில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்த இயக்குனர் ராஜசேகரை மணந்தார். அந்த மணவாழ்வு வெகு காலம் நீடிக்கவில்லை மண முறிவு ஏற்பட்டது. பின்னர் பொன்வண்ணன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரண்யா – பொன்வண்ணன் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி. மருத்துவராக உள்ளார். இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. மேலும் இவர்களின் திருமண வரவேற்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மேலும் இந்த விழாவில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தற்போது பிரியதர்ஷினி மற்றும் தினேஷ் தம்பதிகளின் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Little Talks