சன் டிவி சீரியல் நடிகை ஒருவருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகருக்கும் தற்போது திருமணம் நடந்துள்ள செய்தி அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் என்றாலே ஒரு காலத்தில் சன் டிவி தான். நெடுந் தொடர்களை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இன்று பல தொலைக்காட்சிகள் சீரியலை ஒளிபரப்பினாலும், சன் டிவியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. இந்த டிவிக்கு போட்டியாக இருப்பது விஜய் டிவி. சன் டிவிக்கு அடுத்தப்படியாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்ற சீரியல் நடிகைக்கும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் ஹீரோவுக்கும் திருமணம் முடிந்துள்ளது.

செவ்வந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் 90களில் சின்னத்திரை வெள்ளித்திரை என கலக்கிய ராகவ் தான். இவர் மனைவியுடன் ஜோடி நம்பர் ஒன்னில் கலந்து கொண்டு டைட்டிலை ஜெயித்தவர். தற்போது இந்த சீரியலில்ல ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் திவ்யா ஸ்ரீதர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலின் மூலமாக பிரபலமானார். இவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்தடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் ஒளிபரப்பான சில நாட்களிலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்துவிட்டது இந்த தொடர். தற்போது திவ்யா ஸ்ரீதருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் அர்னவ்க்கும் சத்தமில்லாமல் திருமணம் முடிந்துவிட்டது.

அர்னவ் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு என்ற சீரியலில் நடித்து அசத்தியிருப்பார். திவ்யாவும், அர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் தற்பொது இருவரும் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் புரசைவாக்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் ஆபிசில் பதிவு செய்து கொண்டனர். இந்த புகைப்படங்களை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரவித்து வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Trend Talks