Categories: சினிமா

ரஜினி இருக்கும் போது விஜயை எப்படி சூப்பர் ஸ்டார்னு சொல்லுவீங்க? சரமாரியாக கேட்ட நிருபர்கள்.!

வெளியிட்டது

தமிழகத்தில் சில நாட்களாக சூப்பர் ஸ்டார் யார் என்கிற பிரச்சனை நடந்து கொண்டிருக்க, தற்போது அந்த பிரச்சனையை கிளப்பிய சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் அவர் கோபப்பட்டு கத்தி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வாரிசு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தளபதிக்கு தந்தையாக நடித்திருந்தார் நடிகர் சரத்குமார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த வாரிசு ஆடியோ லாஞ்சில் சூப்பர் ஸ்டார் பிரச்சனை குறித்து பேசி இருந்தார். அதாவது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்னும் ரீதியில் சரத்குமார் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது சூப்பர் ஸ்டார் ரஜினி உயிருடன் இருக்கும் நிலையில் சரத்குமார் எவ்வாறு இப்படி பேசலாம் என்று ரஜினி ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினி இருக்கும் போது விஜயை எப்படி சூப்பர் ஸ்டார்னு சொல்லுவீங்க? சரமாரியாக கேட்ட நிருபர்கள்.! 1

இதனால் பலர் சரத்குமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சரத்குமார் நான் ரஜினியை சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லை, சூரியவம்சம் படத்தின் விழாவின்போது விஜய் சூப்பர் ஸ்டார் போல வருவார் என்று கூறியதை நினைவு கூறினேன். சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுக்க நான் யார்? எல்லோருமே சூப்பர் ஸ்டார் தான், நம் அப்பா தான் நமக்கெல்லாம் சூப்பர் ஸ்டார். சினிமாவை பொருத்தவரை எல்லாருமே சூப்பர் ஸ்டார் தான் என்று விளக்கம் அளித்து இருந்தார். அதற்கு பின்னரும் அவரைச் சுற்றி இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார் சரத்குமார். அப்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பதில் சொல்ல முடியாமல் பல இடங்களில் திணறினார். ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.


அப்போது பேசிய சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது கோபமடைந்து நான் சொல்வதை நீங்கள் ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் வேறு மாதிரியாக மாற்றுகிறீர்கள் என்று கோபமடைந்தார். மேலும் இதற்கு தனியாக ஒரு பேட்டியை நடத்துங்கள் நான் முழுதாக விளக்கம் அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Embed Code Credits: Cinema 5D

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்