தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் உள்ளது. தனது நடிப்பினால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டு இருக்கிறார் விஜய். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது அரசியலில் இறங்கி உள்ளார்.

ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முன்பதிவு தொடங்கி வசூலில் தற்போது சாதனை படைக்க தொடங்கிவிட்டது கோட் திரைப்படம். தமிழகத்தில் கோட் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்காத நிலையில், வெறும் நான்கு ஷோ மட்டும் திரையிட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.செப்டம் பர் 5மட்டும் 6ஆம் தேதிக்கு மட்டும் காலை 9 மணி காட்சிகள் உட்பட மொத்தம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
A big thank you to our Tamil Nadu Government and @Udhaystalin Na for granting special shows and extending the show time and supporting cinema as always 🙏 @Ags_production pic.twitter.com/nG5XLwbJjZ
— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024