தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பி காண்பதற்கே ஒரு கூட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருந்தனர். பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வந்தார். இந்நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க முடியாது என நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்து இருந்தது. மேலும் இவரின் இடத்தினை நிரப்ப போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது விஜய் டிவி. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தாலும் கமல்ஹாசன் போல தப்பு சரி என பிரித்து போட்டியாளர்களை கண்டிக்க முடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து உள்ளது. தற்போது இந்த முதல் ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION