மாயாவிடம் சென்று மன்னிப்பு கேட்ட சரவண விக்ரம்..! கழுவி ஊற்றும் சொந்த தங்கை.! வைரல் பதிவு இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக இருக்கும் சரவண விக்ரமின் தங்கை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் சரவண விக்ரமை தாக்கி அவர் அந்த பதிவை போட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த சரவணன் விக்ரம், அவரது நண்பர்கள் என்று கருதப்பட்ட மாயா பூர்ணிமாவால் மிகுந்த கேளிக்கு உள்ளாக்கப்பட்டார். ‘கரப்பான் பூச்சி’ என்று பட்டப்பெயர் வைத்து மாயாவும் பூர்ணிமாவும் சரவண விக்ரமை மிகவும் அசிங்கப்படுத்தினர்.

மாயாவிடம் சென்று மன்னிப்பு கேட்ட சரவண விக்ரம்..! கழுவி ஊற்றும் சொந்த தங்கை.! வைரல் பதிவு இதோ 1
இதை வீட்டிலிருந்து வரும் ப்ரீஸ் டாஸ்க்கில் சரவணன் விக்ரமின் தங்கை மேற்கோள் காட்டி, “மாயா பூர்ணிமா உனக்கு நல்ல நண்பர்கள் கிடையாது. அவர்களிடம் இருந்து விலகி இரு” என்று அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றார். இதை ஒட்டுக் கேட்ட மாயா, விக்ரமின் தங்கை மீது மிகுந்த கோபம் கொண்டார். மேலும் விக்ரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி செல்லும் போது அவர் மீது வன்மத்துடன் நடந்து கொண்டார். விக்ரமை வழி அனுப்பும் போது கூட அவரது முகபாவனைகள் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது பைனல் வாரத்திற்காக எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அனுப்பியுள்ளனர்.


உள்ளே வந்த சரவணன் விக்ரம் மாயவிடம் முதலில் மன்னிப்பு கேட்கிறார். பின்னர், “வெளியில் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். உள்ளே நமக்கு நிலைமை வேறு மாதிரி இருக்கிறது” என்று சொல்லி மாயாவுடன் சமரசம் செய்து கொள்கிறார். வெளியில் அவரது தாயாரும், தங்கையும் அவ்வளவு முறை எச்சரிக்கை விடுத்தும் இன்னும் விக்ரம் திருந்தவில்லை என்று பிக்பாஸ் பார்வையாளர்களும் அவரை திட்டி தீர்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது விக்ரம் குறித்து அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இந்த பதிவை மறுபகிர்வு செய்யும் நெட்டிசன்கள் பலரும் சரவண விக்ரமை தாக்கி தான் அவரது தங்கை இப்படியாக பதிவிட்டு இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


அந்த பதிவில் சரவண விக்ரமின் தங்கை சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது, “உங்கள் குடும்பத்தினரை காட்டிலும் நீங்கள் மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள்” என குறிப்பிட்டு இருக்கிறார். இவர் மறைமுகமாக தனது அண்ணன் சரவண விக்ரமுக்கு தான் இந்த கருத்தை கூறி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் .

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்