தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகன் மட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்து தற்போது இவர் நடித்த சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே கண்டது. அத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜெய் சுல்தான் பாடல் சமூக வலைத்தளங்களில் பெரும் வெற்றியை கண்டது.

இரும்புத்திரை , ஹீரோ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பி.எஸ் மித்ரன். தற்போது இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படமானது இந்தியா ஹாக்கி வீரர் சர்தார் சிங் வாழ்கை வரலாறு பற்றிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முதல் லுக் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி மற்றுமொரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சிம்ரன் இந்த திரைப்படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சிம்ரன் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது சர்தார் திரைப்படத்திலும் வில்லியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.