ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப என்கிற பாட்டு நிகழ்ச்சியில் தற்போது நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. தனது தாய்குறித்து போட்டியாளராக வந்த சிறுவன் கூறிய கருத்தால் தற்போது பலருக்கும் நெகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தொகுப்பாளினி அர்ச்சனா, நடுவராக இருக்கும் அபிராமி மற்றும் நடுவர்கள் குழுவில் இருக்கும் பலரும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உணர்வுப்பூர்வமான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியை பின்பற்றி எடுக்கப்பட்ட நிகழ்ச்சி தான் சரிகமப. இது சரிகமப சீனியர்ஸ் மற்றும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் என்ற பெயரில் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கான இரண்டு போட்டியாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி தொகுப்பாளினி வி.ஜே அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கரை காட்டிலும் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகி இருக்கின்றனர்.
தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3 நடைபெற்று வருகிறது. இதில் பல குழந்தைகள் பங்கெடுத்து திறமையாக பாடி வருகின்றனர். மேலும் வழக்கம் போல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அர்ச்சனா இருக்க மனோ, விஜய் பிரகாஷ், வைக்கம் விஜயலட்சுமி, பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பாடகர்கள் ஒவ்வொருவராக வந்து பாட அவர்களை தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு சிறுவன் ராம் படத்தில் வரும் “ஆராரிராரோ நான் இங்கே பாட” என்கிற பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். அப்போது பின்னணியில் தான் மேடையில் பாட வேண்டும் என்பது எனது அம்மாவின் ஆசை, ஆனால் அதை தற்போது பார்க்க முடியவில்லை.
அவர் சுயநினைவை இழந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கண்கலங்கி பேசினார். அப்போது அவரது தாயார் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ கிளிப்பிங்கும் காட்டப்பட்டது. அதைப் பார்த்து மேடையில் இருந்த அனைவரும் கண்கலங்கி அழுதனர். குறிப்பாக VJ அர்ச்சனா, அபிராமி, நடுவர் குழுவில் இருந்த பலரும் கண்கலங்கினர்.
அப்போது இங்கு இருக்கும் அனைத்து தாய்மார்களும் உனக்கு தாய் போன்றவர் தான் என்று சொல்லி அர்ச்சனா அந்த சிறுவனை தேற்றினார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Zee Tamil