மதம் மாறி திருமணம் செய்ததால் 17 ஆண்டுகளாக தனது பெற்றோர்கள் தன்னிடம் பேசுவதில்லை என்று சொல்லி போட்டியாளரின் தாயார் ஒருவர் கண்கலங்கி அழுதிருந்தார். தற்போது அவரை மீண்டும் அழைத்து வந்து சேர்த்து வைத்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவரும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கனிஷ்கர் என்ற சிறுவனின் தாயார் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. காதல் திருமணம் செய்ததால் தன்னுடைய தாயார் 17 வருடமாக என்னிடம் பேசவில்லை, என் குழந்தைகளுக்கு நான் மதத்தை கற்றுக் கொடுக்காமல் வளர்த்திருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கி அழுதார். அதை பார்த்த அபிராமி, சைந்தவி உள்ளிட்டோர்களும் கண்கலங்கினர். அப்போது பேசிய சிறுவன் கனிஷ்கர் தனது அம்மம்மாவை பார்க்க வேண்டும், அவர்களைப் பார்த்தால் கட்டி பிடித்து முத்தம் தர வேண்டும் என்று கண் கலங்கி பேசி இருந்தார்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஜீ தமிழ் கனிஷ்கரின் பாட்டியை அழைத்து வந்துள்ளனர். இதை பார்த்த நடுவர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்ணீர் வடித்தனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த அம்மா மகளை ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்று சேர்த்து வைத்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Zee Tamil