“டேய் உனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குடா”!!தன்னிடம் ஜொள்ளு வழிந்த சதிஷை கலாய்த்து தள்ளிய பிரியா பவானி ஷங்கர்!!

வெளியிட்டது

"டேய் உனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குடா"!!தன்னிடம் ஜொள்ளு வழிந்த சதிஷை கலாய்த்து தள்ளிய பிரியா பவானி ஷங்கர்!! 1

புதிய தலைமுறை நியூஸ் சேனலில் தொகுப்பாளராக தன்னுடைய மீடியா வாழ்க்கையை துவங்கிய பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்த போதே மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கொண்டிருந்த இவரை விஜய் தொலைக்காட்சி கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் நாயகியாக 2017ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகம் செய்தது. தொடர் மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டது. ப்ரியாவும் கொஞ்சம் கொஞ்சமாக நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்.

அந்த தொடரில் நடித்து கொண்டிருந்த போ    தே, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில், ரத்னா குமார் இயக்கத்தில், வைபவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா வாய்ப்பு என்பதால் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தின் வெற்றியால் நடிகை பிரியாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர துவங்கின.

கார்த்தி நடித்த கடைகுட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா சாப்டர் 1, ஜீவா அருள்நிதியுடன் களத்தில் சிந்திப்போம், வெப் சீரிஸ் பிளட் மணி, ஹரிஷ் கல்யாண்னுடன்  ஓ மணப்பெண்ணே மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் ஹாஸ்டல் என அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடித்தார். இப்பொது இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், யானை, அகிலன், பொம்மை, பத்துதல, இந்தியன் 2 என அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன.

இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பின்தொடருபவர்கள் அதிகம். அவ்வப்போது போட்ஷூட்கள் நடத்தி இன்ஸ்டகிராம் பக்கத்தில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நடிகர் ஜெயம் ரவி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள “அகிலன்” திரைப்படம்.

அண்மையில் வெளியான இந்த படத்தின் டீஸர் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர். அதிலிருந்து ஒரு போட்டோவை தன்னுடைய ட்விட்டர் வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை, “இந்த வாரம் உங்களுடைய பிளான் என்ன?” என கூறி பதிவிட்டுள்ளார்.

சிறுது நேரத்திலேயே இந்த பதிவு வைரலாக, இதனை கண்டுள்ள நகைச்சுவை நடிகர் சதிஷ், “எந்த ஸ்டேஷன்ல அர்ரெஸ்ட் ஆகணும்” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “டேய் பரமா உனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குடா” என நக்கலாக கமெண்ட் செய்துள்ளார்.

ப்ரியாவும் சதீஷை கலாய்க்க எதோ ஒரு படத்தில் பார்க்கவே பயங்கரமாக நடித்திருக்கும் ஒரு பெண் போலீஸின் புகைப்படத்தை பகிர்ந்து, “வாங்க” என பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்