நடிகர் சதீஷ் நடித்துவரும் வித்தைக்காரன் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் தற்போது குறிப்பிடத் தகுந்த காமெடி நடிகராக இருக்கிறார் நடிகர் சதீஷ். சேலத்தில் பிறந்து வளர்ந்த இவர் கிரேசி மோகன் உடன் இணைந்து பல மேடைகளில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் தான். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பராக டைலர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சதீஷ். அதன் பின்னர் இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. நாய்சேகர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் அவர் தற்போது இரண்டாவது முறையாக வித்தைக்காரன் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் திரைப்படத்திற்கு முன்பாகவே சில படங்களில் நடித்திருக்கும் சதீஷ் தற்போது தமிழ் திரையுலகில் குறிப்பிட்ட ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். மதராசபட்டினம், வாகை சூடவா, மான் கராத்தே, கத்தி, நையாண்டி, ரெமோ, பைரவா, வேலைக்காரன் என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக வாரிசு திரைப்படத்திலும் கண்ணை நம்பாதே திரைப்படத்திலும் நடித்திருந்தார். நாய் சேகர் என்கிற படத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தற்போது வித்தைக்காரன் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சதீஷ். லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கி என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக சிம்ரன் குப்தா என்கிற நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், ஜான் விஜய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார்.
இந்தப்படம் கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்நிதி நடித்த தேஜாவு படத்தை தயாரித்த ஒயிட் கார்ப்பெட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு விபிஆர் இசையமைக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில் செஸ் விளையாட்டு போல் காட்டப்படுகிறது. ஒரு பக்கத்தில் சதீஷும், மற்ற அனைவரும் எதிர்புறத்தில் இருப்பது போல வீடியோ வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டர் வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India