2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் அதன் பின்னர் குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார். அதன் பின்னர் இவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. ஆனால் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பாக தனக்கு இரு கிட்னிகளும் செயல் இழந்து விட்டதாகவும், ஆறு மாதம் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றும், அதனால் தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்றும் கண்ணீர் மல்க தனது மனைவியுடன் பேட்டி அளித்திருந்தார். பிறகு ஒரு நாள் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் போகவே, பலரும் இறந்து விட்டதாக கூறிய நிலையில் அவரது மனைவி மட்டும் நம்பிக்கையுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

இருப்பினும் அவரது மனைவி கவிதா தன்னம்பிக்கையை கைவிடாமல் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே 15 நாட்களில் அவருக்கு மீண்டும் சுயநினைவை வர வைத்திருக்கிறார். பின்னர் அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால், கை கால்கள் எல்லாம் வீங்கி நடக்க முடியாமல் பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தனி ஒரு பெண்ணாக இருந்து அவரை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது பிளாக் பாண்டி, நடிகர் கார்த்தி, சரவணன் போன்றவர்கள் செய்த உதவியால்தான், என்னுடைய கணவரை பார்த்துக் கொள்ள முடிந்தது என்று கவிதா தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பன்னிரண்டு மணிக்கு ஹரி வைரவன் யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

நடிகர்களும் பெயரளவிற்கு இரங்கல் தெரிவித்தனர். ஆனால் ஒருவர் கூட அங்கு வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஒரு உடைந்த வீட்டிற்கு வெளியில் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. அவரது மனைவி மற்றும் குழந்தை மட்டுமே அருகில் இருக்கின்றனர். குழந்தை ஹரியின் சடலத்துக்கு அருகே சென்று அப்பாவை எழுப்ப முயன்று கொண்டிருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே அவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கின்றனர். வேறு எந்த சினிமா பிரபலங்களும் வரவில்லை. கடுமையான ஏழ்மையிலும் கணவனை தனியாக போராடி பார்த்துக்கொண்ட அந்த மனைவிக்கு கடைசியில் தோல்வியே மிஞ்சியது. இந்த காட்சிகளை பார்த்த பலரும் இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது என்று தங்களது இரங்கல்களை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Bingoo Box