விக்ரமன் உனக்கு முதல்ல அறிவு இருக்கா? நீ பெரிய காந்தியா? விக்ரமனை வெளுத்து வாங்கிய வனிதா

பிக்பாஸ் சீசன் 6ல் அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே நாளுக்கு நாள் சண்டை அதிகமாகி வரும் நிலையில் தற்போது வனிதா விக்ரமன் பற்றி காட்டமாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார். விக்ரமன் ஒன்றும் மேன்மக்கள் கிடையாது என்று அவர் ஒருமையில் பேசியிருக்கிறார். கடந்த ஐந்து சீசன்களை காட்டிலும், இந்த பிக்பாஸ் சீசன் தொடங்கிய நாள் முதலே சண்டை சச்சரவு என தொடர்ந்து வருகிறது
குறிப்பாக அசிமின் சில விரும்பத்தக்காத செயல்கள் பார்ப்பவர்களை பொறுமையை இழக்க செய்து இருக்கின்றது. இத்தனை நாள் நடந்த பிக்பாஸ் சீசனில் சக போட்டியாளரை அடிக்க பாய்வதும், ஒருமையில் பேசியதும் கிடையாது. ஆனால் அசீம் ஒரு படி மேலே போய் சக போட்டியாளர்களை அடிக்கப் போவதும், பெண்களை வாடி போடி என்று பேசுவதும் ஆண் போட்டியாளர்களை வாடா போடா என்று அவமானப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

விக்ரமன் உனக்கு முதல்ல அறிவு இருக்கா? நீ பெரிய காந்தியா? விக்ரமனை வெளுத்து வாங்கிய வனிதா 1

விளம்பரம்

இதைப் பார்த்த பலருக்கும் அசீம் மீது கடுப்பு வந்துள்ளது உண்மைதான். ஆனால் வழக்கம் போல் கமலஹாசன் காட்டமான விமர்சனங்களை முன்வைக்காமல் பூசி மெழுகி வருகிறார். இதனால் கமலஹாசனையே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அசீமை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், நேற்று அது குறித்து பேசிய கமல் அப்படி செய்தால் அசீமுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பூசி மெழுகும் வண்ணமாக பேசி இருந்தார். இப்படி நாளுக்கு நாள் அசீம் மற்றும் விக்ரமனின் சண்டை அதிகமாகி வரும் நிலையில், தற்போது வனிதா அசீமுக்கு ஆதரவாக சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  நடுரோட்டில் மதுர வீரன் பாட்டுக்கு தாவணி சேலையில் மரண குத்தாட்டம் போட்ட ரவீணா.!

விக்ரமன் உனக்கு முதல்ல அறிவு இருக்கா? நீ பெரிய காந்தியா? விக்ரமனை வெளுத்து வாங்கிய வனிதா 3

விளம்பரம்

வனிதா தற்போது பிக்பாஸ் பற்றிய ரிவ்யூக்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக நேற்று பேசும்போது அவர் ப்ரோமோக்காக அசீம் சில வேலைகளை செய்கிறார் என்று விக்ரமன் கூறுகிறார், ஆனால் நீ எதுக்கு பிக்பாஸுக்கு வந்த? நீ என்ன பெரிய காந்தியா? நீ அவ்வளவு பெரிய மேன்மக்கள் ஒன்றும் கிடையாது. எல்லாரும் வெளிச்சத்திற்காக தான் பிக்பாஸுக்கு வந்து இருக்கிறார்கள். நடிகர்கள் பிக்பாஸிற்கு வருவது ஒரு நியாயம் என்றால் அரசியல்வாதி நீ எதற்காக பிக் பாஸிற்குள் வந்தாய் என்று கடுமையாக சில கேள்விகளை எழுப்பினார். இதை பார்த்த விக்ரமன் ரசிகர்கள் வனிதாவை திருப்பித் தாக்க தொடங்கி இருக்கின்றனர். நீ எல்லாம் இது குறித்து பேசவே கூடாது என்று வனிதா மீது விக்ரமன் ரசிகர்கள் கமெண்ட்களை வாரி இறைத்து வருகின்றனர்.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Indiaglitz Tamil

விளம்பரம்

Leave a Comment