நடிகர் சத்யராஜ் நடிக்கும் அங்காரகன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மொட்டை கெட்டப்பில் வில்லன் போல தோற்றமளிக்கிறார் சத்யராஜ். மேலும் எனக்கு கட்சி ஆரம்பிக்கவும் தெரியாது, கட்சி ஆரம்பிக்க போறேன் என்று சொல்லி ஏமாற்றவும் தெரியாது போன்ற வசனங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரடியாக அட்டாக் செய்வது போல அமைந்துள்ளது. தமிழ் திரையுலகின் 80 மற்றும் 90களில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். 1954 கோயம்புத்தூரில் பிறந்த இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார். ரெங்கராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் சத்யராஜ் என்று மாற்றி வைத்துக்கொண்டார். 1978ம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். 45 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் சத்யராஜ் தற்போது வரை பல படங்களில் நடித்து முடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாகுபலி, லவ் டுடே, பிரின்ஸ், கனெக்ட் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பின்னர் இவரின் செல்வாக்கு பல மடங்காக உயர்ந்தது. பின்னர் லவ் டுடே படத்தில் ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் போனை மாற்றி கொடுப்பார். அப்போது வில்லனாக மாஸ் காட்டியிருப்பார். தொடர்ந்து பிரின்ஸ், கனெக்ட் போன்ற படங்களில் ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் ஆயிண்ட்டே ரெண்டம், மோக்ஷணம் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் அங்காரகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்கியுள்ளார். ஜோமன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமன் ஆகிய இருவர் இந்த படத்தை ஜூலியன் அண்ட் ஜெரோமா இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்து உள்ளனர்.
இந்த படத்தில் சத்யராஜுடன் இணைந்து ஸ்ரீபதி, நியா, ரெய்னா கரட், அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கு கார்த்திக் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அதில் “எனக்கு கட்சி ஆரம்பிக்கவும் தெரியாது, கட்சி ஆரம்பிக்க போறேன் என்று சொல்லி ஏமாற்றவும் தெரியாது” போன்ற வசனங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரடியாக தாக்குவது போல வசனங்களுடன் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Trend Music