சிறிய வீட்டில் மிக எளிமையாக வாழ்ந்து வரும் ஆர்த்தி.! அழகான ஹோம் டூர் வீடியோ.!

தமிழில் மனோரமா மற்றும் கோவை சரளாவிற்கு பிறகு பெண் காமெடியாளர்கள் மிகக் குறைவு. அப்படியே அவர்கள் வந்தாலும் நிலை பெற முடிவதில்லை. பாதியிலேயே திரையுலகை விட்டு விலகி விடுவார்கள். ஆனால் மனோரமா, கோவை சரளாவிற்கு பிறகு குறிப்பிட்ட சொல்லக் கூடிய ஒரு காமெடியாளர் என்றால், அது ஆர்த்தி தான். 1987 ஆம் ஆண்டு “வண்ணக் கனவுகள்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஆர்த்தி. அதன் பின்னர் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். என் தங்கை கல்யாணி என்கிற படத்தில் நடிகர் கணேஷுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னாளில் கணேஷையே திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சுமார் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிறிய வீட்டில் மிக எளிமையாக வாழ்ந்து வரும் ஆர்த்தி.! அழகான ஹோம் டூர் வீடியோ.! 1

விளம்பரம்

மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார். சமீபத்தில் அவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். ஆர்த்திக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 1ல் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். இங்கு அவர் சர்ச்சையான போட்டியாளராக வலம் வந்தார். பிக்பாஸ்க்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சிகளில் சீசன் 2வில் அவர் தனது கணவருடன் பங்கேற்றார். இந்த போட்டியில் அவர் இறுதி வரை வந்தார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் கடின உழைப்பால் நடனமாடி வந்தார் ஆர்த்தி.

தொடர்புடையவை  பிரபு தேவா நடிக்கும் 60-வது திரைப்படம்.! Wolf (உல்ஃப்) படத்தின் டீசர் வெளியானது.!

சிறிய வீட்டில் மிக எளிமையாக வாழ்ந்து வரும் ஆர்த்தி.! அழகான ஹோம் டூர் வீடியோ.! 3

விளம்பரம்

ஆர்த்தி உடல் எடை அதிகமாக இருப்பதால் பலராலும் உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் அதை எல்லாம் அவர் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து அவர் திரையுலகிலும் சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். சிறந்த நகைச்சுவைக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். இளம் வயதிலேயே கலைமாமணி விருது பெற்ற முதல் திரைப்பட கலைஞரும் அவரே. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் எந்த பெரிய படங்களிலும் நடிக்கவில்லை. சின்னத் திரையில் மட்டுமே அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். இந்த நிலையில் ஆர்த்தி தனது வீட்டை சுற்றிக் காண்பித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அப்பார்ட்மெண்டில் வசிக்கும் அவர் தேவையற்ற எந்த பொருளையும் வீட்டில் வைக்காமல், மிக எளிமையாக வீட்டை பராமரித்து வருகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Harathi Ganesh

விளம்பரம்

Leave a Comment