மூன்று மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!!

மூன்று மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!! 1

வடகிழக்கு பருவ மழை தன் ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், நேற்று பல இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரியளவில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.வடகிழக்கு பருவ மழை தன் ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், நேற்று பல இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரியளவில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

திங்கள் கிழமையான இன்று (அக்டோபர் 21) மழை விடாமல் பெய்து வருகிறது. இதையடுத்து, காலையிலேயே மாணவர்களும், பெற்றோர்களும் விடுமுறை அறிவிப்பு செய்திகளை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு! ஜனவரி 2-ம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!

மேலும், கோவை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்.குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்லு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் உள் மாவட்டங்களை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது குறுப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment