Categories: சினிமா

என் புள்ளை போயிட்டான்பா…! பாரதிராஜா கைகளை பிடித்து ஆறுதல் சொன்ன Seeman..!

வெளியிட்டது

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் மகன் மனோஜ். இவர் தமிழில் தாஜ்மகால் படத்தில் நாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. இதனால் சினிமாவில் இருந்து நின்ற பிரேக் எடுத்தார். பின்னர் தொடர்ந்து சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று போராடி வந்தார் மனோஜ். பின்னர் இயக்குநர் ஆக களம் இறங்கிய இவர் மார்கழி திங்கள் என்ற படத்தினை இயக்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் புள்ளை போயிட்டான்பா...! பாரதிராஜா கைகளை பிடித்து ஆறுதல் சொன்ன Seeman..! 1

இந்நிலையில் இருதய சிகிச்சை மேற்கொண்ட மனோஜ் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழ் சினிமாவை பெரும் சோகத்திற்கு ஆளாக்கி உள்ளது. தற்போது திரை நட்சத்திரங்கள் பலரும் மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனோஜுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

சோகத்தில் இருந்த பாரதி ராஜா கைகளை பிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். சீமானை பார்த்ததும் பாரதி ராஜா கண்கலங்கி அழுது இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : Thanthi Tv

வெளியிட்டது

புதிய செய்திகள்