திடீரென நாடகத்தை முடித்து பேக் செய்த செம்பருத்தி சீரியல்.! என்ன காரணம் தெரியுமா? | Sembaruthi Zee Tamil

வெளியிட்டது

சன் டிவிக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு மெகா தொடர்களை எடுத்து எடுத்து வரும் இரண்டு தொலைக்காட்சிகள் தான் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ். விஜய் டிவிக்கும் ஜீ தமிழுக்கும் தொழிலில் போட்டி இருந்து வருகிறது. விஜய் டிவியில் நடிக்கும் பிரபலங்கள், ஜீ தமிழில் பெரும்பாலும் நடிப்பதில்லை. அதற்கு உதாரணம் ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் வர முடியாமல் லேட் ஆக தான் வந்து சேர்ந்தார். இந்த நிலையில் ஜீ தமிழ் “செம்பருத்தி” என்னும் சீரியலை கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பி வருகிறது. 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடர் 2022 ஆம் ஆண்டு கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜவ்வு போல் இருக்கும் இந்த தொடரை பார்க்க மக்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால் தற்போது இந்தத் தொடரை ஜூலை 31ஆம் தேதி உடன் முடித்து விட நாடக குழு திட்டமிட்டுள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

திடீரென நாடகத்தை முடித்து பேக் செய்த செம்பருத்தி சீரியல்.! என்ன காரணம் தெரியுமா? | Sembaruthi Zee Tamil 1

2007 ஆம் ஆண்டு ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயின் ஷபானாவும்,ஆதியின் தாயாராக ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ராமனும் நடித்து வந்தனர். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியலில் இருந்து ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் திடீரென விலகினார். பின்னர் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் மிகவும் சரிந்தது. பின்னர் தனியார் youtube தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அக்னி என்பவர் ஆதி கதாபத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் நாடகம் 5 வருடங்களாக ஜவ்வு போல் எழுத்து வருவதால் நாடகத்தின் டிஆர்பி ரேட்டிங் வெகுவாக குறைந்துவிட்டது. நாடகத்தை பார்க்கும் மக்கள் எப்போது இந்த நாடகத்தை முடிப்பீர்கள்? என்று எண்ணும் அளவிற்கு கதையே இல்லாமல் இழுத்து அடித்து வந்தனர்.

மேலும் இந்த சீரியலில் இருந்து ஹீரோயினாக நடித்து வரும் ஷபானாவும் விலக உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியலில் முன்பு செழியனாக நடித்து வந்த ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எனவே இவர்கள் இருவரும் இணைந்து புதிய தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஷபானாவும் விலகிவிட்டால் இந்த சீரியலை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று சீரியலையே முடித்து விட நாடக குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below video…

YouTube Video Code Embed Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்