Categories: சினிமா

ரொம்ப நல்லா வர வேண்டிய படம், கடைசில இப்படி பண்ணிட்டாங்க.! ப்ளூ சட்டை விமர்சனம்

வெளியிட்டது

இன்று காலை வெளியான செம்பி திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்ழ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளிவந்த படம் தான் செம்பி. இந்த படத்தில் கோவை சரளா, குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் அதில், அவர் மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு பாட்டி, தாய் தந்தை இல்லாத தனது பேத்தியை வளர்த்து வருகிறார். அப்போது ஒரு நாள் அந்த குழந்தையை அரசியல்வாதியின் மகன்கள் சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். பின்னர் இந்த விஷயம் பாட்டிக்கு தெரிய வர அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு அந்த எவ்வாறு போராடுகிறார் என்பது குறித்த கதை தான் செம்பி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரொம்ப நல்லா வர வேண்டிய படம், கடைசில இப்படி பண்ணிட்டாங்க.! ப்ளூ சட்டை விமர்சனம் 1

இந்த படம் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்த ப்ளூ சட்டை மாறன், வழக்கம் போல் பிரபு சாலமன் மலை கிராமங்களை மிக அழகாக காட்டியிருப்பதாகவும், முதல் பாதியை பார்த்த போது எடுத்த எடுப்பிலேயே நன்றாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கை வந்ததாகவும் வித்தியாசமான கதையுடனும் வேகமாக சென்றதாகவும் கூறினார். ஆனால் இரண்டாம் பாகம் முழுவதும் போர் அடித்து விட்டதாகவும், அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்கும்படியாக இருந்ததாகவும் கூறினார். மேலும் பஸ் சேசிங் சீன் எல்லாம் சினிமாத்தனங்களுக்கே உரிய கதையாக மாறிப் போய்விட்டது, இந்த படத்தில் சிறுமியாக செம்பி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அந்த குழந்தையின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்ததாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை கூறினார். மேலும் கோவை சரளாவுக்கு மேக்கப் சரியில்லை ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு மாதிரியாக தோற்றம் அளித்தார்.


பேருந்தில் அவர்கள் பயணம் செய்யும் காட்சிகள் சில இடங்களில் போரிங் ஆக இருந்தாலும், ஒரு கேரக்டர் வாடா போடா என்று பேசிக் கொண்டிருக்கும் அது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்ததாக கூறினார். மேலும் கோவை சரளா ஒரு இடத்தில் சண்டை போட்டு இருப்பார். அந்த காட்சிகள் எல்லாம் பிரமாதமாக வந்திருந்ததாகவும், இரண்டாம் பாகத்தில் பல காட்சிகள் போர் அடித்ததாகவும் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டு இருந்தால் படம் சூப்பராக வந்திருக்கும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம் தற்போது ஒருமுறை பார்க்கலாம் என்ற அளவிலேயே இருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவரின் அந்த முழு வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்