இன்று காலை வெளியான டிரைவர் ஜமுனா படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் படம் நன்றாக இல்லை என்ற கருத்தையே முன் வைத்திருக்கிறார் .ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் டிரைவர் ஜமுனா. இந்த படத்தை இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கியிருக்கிறார். வத்திக்குச்சி படத்தை இயக்கிய இவர் 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கிரைம் தில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் இந்த படம் நன்றாக இருப்பதாகவே கூறினர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் அதற்கு மாறான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். தந்தை இறந்த பிறகு கால் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நிலையில் கூலிப்படை ஒன்று அவரது காரில் ஏறி விடுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூலிப்படையை துரத்தி வரும் போலீஸ் ஐஸ்வர்யா ராஜேஷின் காரை பின் தொடர்கிறது. பின்னர் இவர்களிடம் இருந்து எப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தார்? கூலிப்படையன் திட்டம் நிறைவேறியதா என்பதற்கான விடை தான் இந்த படத்தின் மீதி கதை. இந்த படத்தின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ட்விஸ்ட் மிக நன்றாக இருந்ததாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். கால் டாக்ஸி ஓட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண் ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டுள்ளார் என்றால் அங்கு எவ்வளவு பதட்டமாக இருக்க வேண்டும்? ஆனால் இந்த கதையிலோ ஒரு துளி பதட்டம் கூட இல்லை. மேலும் ரவுடிகளை பிடிக்க போலீஸ் ஒரு்முனைப்பும் காட்டவில்லை. மேலதிகாரிகளிடம் கேட்ட பொழுது உங்களிடம் இருக்கும் ஆட்களை வைத்து ரவுடிகளை பிடிக்குமாறு மேலிடம் உத்தரவிடுகிறது.

ஆனால் கூலிப்படையை துரத்துவதற்கு இவர்கள் வெறும் மூன்று நான்கு பேர்கள் தான் இருக்கிறார்கள். இதிலிருந்து தெரிந்து விட்டது இவர்கள் ரவுடிகளை பிடிக்க மாட்டார்கள் என்று. மேலும் கடைசியில் கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை வைக்கிறார்கள். ஆனால் அந்த ட்விஸ்ட் வருவதற்குள் நாம் சோர்ந்து விடுவோம். இந்த கதை க்ரைம் தில்லர் கதைக்கு தேவையான நன்றான ஒரு கதை தான்் ஆனால் திரைக்கதை எதுவுமே இல்லாமல் மொட்டையாக இந்த கதை இருந்தது. நன்றாக வந்திருக்க வேண்டிய இந்த படம் இப்போது ரொம்ப சுமாரான படமாக மாறிவிட்டது என்று விமர்சனங்களை முன் வைத்தார். நீங்களும் அவரை விடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Tamil Talkies