கோவை சரளா, குக் வித் கோமாளி அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி இருக்கிறது. மைனா, கும்கி, தொடரி போன்ற வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் சில வருடங்களாக எந்த படத்தையும் எடுக்காமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோவை சரளா மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினை வைத்து செம்பி என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கோவை சரளா மாறுபட்ட கதாபாத்திரத்தில் 90 வயது முதியவராக நடித்திருக்கிறார் என்று தெரிகிறது. பிரபு சாலமன் படங்களை பொறுத்தவரை எப்பொழுதும் இயற்கை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதனால் இந்த படமும் அதேபோல் எடுக்கப்பட்டிருக்கும் என்பது ட்ரெய்லர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
டீசர் வீடியோ மட்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. தனது பேத்தியுடன் வசித்து வரும் முதியவரான கோவை சரளா பேத்தியை அழைத்துக் கொண்டு பேருந்தில் செல்கிறார். அப்போது அங்கு நடக்கும் கதையை மையமாக வைத்துதான் கதை நகர்வது போல் தெரிகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the below video.!
Youtube Video Code Embed Credits: Saregama Tamil