
தமிழ் சினிமாவில் தந்தைகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர்களுடைய மகன்களும் சினிமாவில் களமிறங்குவது சகஜம். ஆனால் அப்படி வந்த அனைவருமே தந்தையை போல பெரிய வெற்றிகளை பெற்றுவிடுவதில்லை. சிலர் தங்களது தந்தையை மீறியும் மிக பெரிய அளவில் வளர்ந்து விடுகிறார்கள். இந்த வெற்றியையும் தோல்வியையும் யாராலும் கணித்து விட முடியது. சினிமாவில் ஜெயிக்க தந்தைகள் முக்கியமில்லை, உழைப்பும் மக்கள் அபிமானம் மட்டுமே உதவும்.

நகைச்சுவை நடிகர்கள் எப்போதும் ஒரே கூட்டணியில் இருப்பதில்லை. ஒரு ஒரு படத்திற்கும் அவர்களுடைய கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் 1980களில் தமிழ் சினிமா காமெடிக்கு முகவரியாகவே அமைந்து போனார்கள் கவுண்டமணியும் செந்திலும். இவர்கள் காமெடி மூலமே ஓடிய படங்கள் அன்றைய காலகட்டங்களில் பல உள்ளன.

மலையூர் மம்பட்டியான் படம் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமான செந்தில் பின்நாளில், கவுண்டமணியுடன் இணைந்த அனைத்து படங்களுமே மிக பெரிய வெற்றி பெற்றவை. இவர்கள் காமெடி காட்சிகள் அந்த காலத்தில் மக்களிடம் மிக பெரிய அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருந்தது. மென்மேலும் வளர்ந்த இவர்கள் கூட்டணி 2000ஆம் ஆண்டு கடைசியில் மெல்ல வயது காரணமாக இருவருமே சினிமாவில் இருந்து மெல்ல ஒதுங்கினார்.

இப்போது நடிகர் செந்திலின் மகன் மணிபிரபு திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார். மேடையில் சமீபத்தில் கூட செந்தில் அவர்கள் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. செந்திலுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் அவரும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

செந்திலின் மகன் அவர்கள் பாபி சிம்ஹா தயாரித்து நடித்து வரும் தடை உடை என்ற படத்தில் நடிகர் செந்தில் மகன் மணிகண்ட பிரபு நடிக்கிறாராம். செந்திலின் மகன் மணிபிரபுவின் முதல் திரைப்படமாக கருதப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செந்திலை கொண்டாடிய ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் மூலம் அவருடைய மகனை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் செந்தில் மகன் மற்றும் பாபி சிம்ஹா ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.