திரும்பி பார்க்க வைக்கும் வளர்ச்சி.! ஸ்விட்சர்லாந்தில் பனி மலையில் ஆட்டம் போடும் செந்தில் ராஜலட்சுமி ஜோடி.!

வெளியிட்டது

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், சுவிட்சர்லாந்துக்கு சென்று அங்கு பனி சூழ்ந்த நடுரோட்டில் நின்று வாயா சாமி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பலருக்கும் பின்னணி பாடும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. பலரும் இன்று வெள்ளித் திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடித்தளமாக இருந்தது இந்த நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசனில் பாடகர்களாக கலந்து கொண்ட கணவன் மனைவி தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இருவரும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர் என்று சொன்னால் அது மிகையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.!

திரும்பி பார்க்க வைக்கும் வளர்ச்சி.! ஸ்விட்சர்லாந்தில் பனி மலையில் ஆட்டம் போடும் செந்தில் ராஜலட்சுமி ஜோடி.! 1

கிராமத்திலிருந்து நாட்டுப்புறக் கலையை வளர்த்தெடுக்கும் பொறுப்புடன், பல கிராமங்களுக்குச் சென்று நாட்டுப்புற கலையை வளர்த்து வந்தவர்கள் தான் இந்த தம்பதியினர். பட்டி தொட்டி எங்கும் இந்த கலையின் அருமையை கொண்டு சேர்த்தனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் கலந்து கொண்ட சீசனின் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார். ராஜலட்சுமி பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இருவரும் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பைப் பெற்றனர். குறிப்பாக ராஜலட்சுமி பாடிய வாயா சாமி பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதன் பின்னர் ராஜலட்சுமிக்கு பல படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இது மட்டுமில்லாமல் மேடைக் கச்சேரிகள், வெளிநாடுகள் என பல இடங்களில் இருவரும் பாடி வருகின்றனர். தற்போது இருவரும் சுவிட்சர்லாந்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அங்கு இருவரும் பனி சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டு வாயா சாமி பாடலுக்கு மிக அழகாக நடனமாடுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் உழைத்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என்பதற்கு உதாரணமாக இவர்கள் இருவரும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அவர்களின் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்