பிரபல சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் சிறகடிக்க சீரியல் நாயகன் முத்து..! அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ திருமண அறிவிப்பு..!

வெளியிட்டது

நம்பர் 1 சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஆரம்பத்தில் தடுமாறிய கதைக்களத்தை சீர் செய்து மிகப்பெரிய வெற்றி சீரியலாக மாற்றியுள்ளார் இயக்குனர். மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் தங்களது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கின்றார்கள். தற்போது இந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் சீரியலாக உருவெடுத்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

பிரபல சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் சிறகடிக்க சீரியல் நாயகன் முத்து..! அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ திருமண அறிவிப்பு..! 1

இந்த சீரியலில் கதாநாயகனாக வருபவர் தான் வெற்றி வசந்த். இந்த சீரியல் மூலம் தான் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார். இந்த சீரியலில் எதார்த்தமாக நடித்து தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். ரசிகர்கள் அவர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.

பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவியை காதலிப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனம் ஆடி வீடியோவாக வெளியிட்டு உள்ளார். மேலும் தாங்கள் காதலித்து இரண்டு மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில் அதையும் குறிப்பிட்டு உள்ளார். ரசிகர்கள் அவருக்கு பெரும் வாழ்த்துக்களை மனமகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்