பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷுக்கு டும் டும்..! வெளியாகிய திருமண புகைப்படங்கள்..!

வெளியிட்டது

சன்டிவியில் ஒளிபரப்பாகிய அழகி சீரியலில் நடித்து சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தவர் அவினாஷ். இந்த சீரியலை தொடர்ந்து கயல் சீரியலில் தம்பியாக நடித்து அசத்தினார். பின்னர் இந்த தொடரை விட்டு வெளியேறிய இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி நடனமாடி அனைவரையும் அசத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷுக்கு டும் டும்..! வெளியாகிய திருமண புகைப்படங்கள்..! 1

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விபத்தில் இவர் இரண்டு கால்கள் எலும்பு முறிந்தது. இதனால் இந்த போட்டியை தொடரமுடியாமல் வெளியேறினார். தற்போது வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது. தற்போது இவர் தான் காதலித்து வந்த பெண்ணை கரம்பிடித்து உள்ளார்.

இவர்கள் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை அவினாஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்