விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்தாலே தனி மதிப்பு ரசிகர்களிடம் எப்பொழுதும் இருக்கும். அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்யலட்சுமியில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா. இந்த தொடரில் பாக்கியாவுக்கு எப்பொழுதும் ஆதரவு அளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து இருக்கிறார்.

இவர் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். பாரதிராஜா இயக்கிய தெற்கத்திப்பொண்ணு என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர் இவர். சீரியல்களில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சுமார் 75 படங்கள் வரை நடித்து இருப்பார். பல படங்கள் நடித்தும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான்.
இவருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர். இவர் தொடர்ந்து படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார். கம்பம் மீனா தனது பேரன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் கம்பம் மீனாவின் பேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.