மாலையும் கழுத்துமாக நல்ல செய்தி சொன்ன முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி.! என்ன விஷயம் தெரியுமா?

வெளியிட்டது

சீரியல் நடிகை வைஷாலி தனது கணவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நல்ல செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். அதாவது அவர் தனது கணவருடன் சேர்ந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார். சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்குவது கிடையாது. அவர்கள் சொற்ப சம்பளத்திற்காகவே நடிக்கின்றனர். மேலும் துணை வேளங்களில் நடிக்கும் நடிகைகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

மாலையும் கழுத்துமாக நல்ல செய்தி சொன்ன முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி.! என்ன விஷயம் தெரியுமா? 1

இதனால் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் சைடில் தங்கள் சொந்த பிசினஸையும் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது முத்தழகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் வைஷாலி தனது கணவருடன் இணைந்து உடற்பயிற்சி கூடம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர் வைஷாலி. பின்னர் ராஜா ராணி சீசன் ஒன் சீரியலில் சஞ்சீவின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக சீமராஜா படத்தில் இவர் நடித்திருக்கிறார். அதன் பிறகு படங்களை நடிக்கும் வாய்ப்பு குறைந்த பின்பு மீண்டும் சீரியல் பக்கம் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தார் வைஷாலி. பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். தற்போது மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பி இருக்கும் வைஷாலி, முத்தழகு என்கிற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இதில் ஹீரோ பூமிநாதனுக்கு இரண்டாவது மனைவியாக வைஷாலி நடித்து வருகிறார்.


இந்த நிலையில் அவர் தனது கணவர் தேவ் உடன் இணைந்து மாலையும் கழுத்துமாக புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அதில் அவரும் அவரது கணவரும் இணைந்து உடற்பயிற்சி கூடம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த தொடக்க நிகழ்வின் போது தான் இவர்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த புகைப்படங்களுக்கு கீழே பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்