ஸ்ருதியை வைத்து முத்துவை வீட்டை விட்டு துரத்த திட்டம் தீட்டும் ரோஹிணி.! உடந்தையான மனோஜ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தூங்குவதற்கு இடமில்லாமல் ஒவ்வொருவரும் தவித்து வரும் நிலையில், அண்ணாமலை ஒரு முடிவை எடுக்கிறார். அதன்படி மூன்று மகன்களில் ஒருவர் வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு பின்னர் சுழற்சி முறையில் மற்றவர் அறையில் படுத்துக்கொள்ளலாம் என அவர் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியை வைத்து முத்துவை வீட்டை விட்டு துரத்த திட்டம் தீட்டும் ரோஹிணி.! உடந்தையான மனோஜ்.! 1

விளம்பரம்

ஆனால் இந்த திட்டம் மனோஜ்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மனோஜின் அறையில் மீனாவும் முத்துவும் தங்குகின்றனர். ஆனால் மனோஜ் தொடர்ந்து அவர்களின் அறையைத் தட்டி சார்ஜர் வேண்டும், பெட்ஷீட் வேண்டும் என தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். பின்னர் வெளியில் ஹாலில் படுத்துக்கொள்ளும் அவருக்கு சுத்தமாக தூக்கம் வரவில்லை. அப்போது ரோகிணி அவரிடம், “அடுத்த வாரம் ரவி – ஸ்ருதி வெளியில் வந்து படுப்பார்கள். ஆனால் ஸ்ருதி கண்டிப்பாக இதை வைத்து பிரச்சனை செய்வார் அப்போது கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்” என மனோஜை ஏற்றி விடுகிறார்.

தொடர்புடையவை  சண்டைக்கு போன புகழை தலைகீழாக தூக்கி சுற்றிய காளையன்.! செம்ம காமெடியான ப்ரோமோ.!

ஸ்ருதியை வைத்து முத்துவை வீட்டை விட்டு துரத்த திட்டம் தீட்டும் ரோஹிணி.! உடந்தையான மனோஜ்.! 3

விளம்பரம்

இந்தப் ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், மத்திய அரசு ஓய்வு பெற்ற ஊழியர், ரயில் ஓட்டுனராக இருந்த அண்ணாமலைக்கு எக்ஸ்ட்ரா ஒரு அறை  கூட கட்ட முடியவில்லையா? என கிண்டலாக கலாய்த்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment