விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி, ராதிகா மற்றும் அவரது தாயாரை அதிகாரம் செய்கிறார். இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் ராதிகாவின் அம்மாவை வெளியில் படுக்கச் சொல்லிவிட்டு, அந்த அறைக்கு ஈஸ்வரி செல்கிறார். இப்படி ஒவ்வொன்றாக ராதிகாவுக்கும், ஈஸ்வரிக்கும் பிரச்சினை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனக்கு தன்னுடைய மகன்தான் முக்கியம் என்று சொல்லி ஈஸ்வரி, கோபி மற்றும் ராதிகாவுடன் கிளம்பி ராதிகாவின் தாயார் வீட்டிற்கு சென்று விடுகிறார். ஆனால் அங்கு ராதிகா ஈஸ்வரியை சரியாக கவனிக்கவில்லை. ஈஸ்வரி வெகு நேரமாக காபி கேட்டும் ராதிகாவும் அவரது தாயாரும், ஈஸ்வரிக்கு காபி போட்டு கொடுக்கவில்லை. எனவே மயக்கம் வந்தது போல ஈஸ்வரி நாடகமாட அதை உண்மை என கோபியும் நம்பி விடுகிறார். பின்னர் ராதிகாவை அழைத்து தன் தாய்க்கு மாத்திரை போட வேண்டும் இல்லையா.? உடனே சென்று சமைத்துக் கொடு என மிரட்டுகிறார்.

ராதிகாவும் சமைப்பதற்காக செல்லும்போது கால் மேல் கால் போட்டு கொண்டு ஈஸ்வரி தக் ஃலைப் செய்கிறார். இதை பார்த்த ராதிகாவும் அவரது தாயாரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இப்படியாக ஒவ்வொரு பிரச்சனையாக ஈஸ்வரிக்கும், ராதிகாவுக்கும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television