திருமணத்திற்கு முன்பே அமீர் பாவனி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் தற்போது ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5வில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இதில் பாவனி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது கணவர் திருமணமான சில மாதங்களிலேயே, சிறிய பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனால் பாவனி மீது அனைவருக்கும் ஒரு பரிதாப உணர்வு இருந்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர் நடன இயக்குனர் அமீர். இவர் பாவனியை காதலிப்பதாக பிக்பாஸில் இருந்த போது கூறி வந்தார். ஆனால் பாவனி அமீரின் காதலை ஏற்காமலேயே இருந்து வந்தார்.

திருமணத்திற்கு முன்பே அமீர் பாவனி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போதும் பலமுறை அமீர் தன் காதலை ஏற்க்குமாறு பாவனியிடம் கூறி வந்தார். ஆனால் பாவனி கூறும் பொழுது, தான் ஒரு ராசி இல்லாதவர், தான் யாரிடமாவது நெருங்கி சென்றால் அவர்கள் தன்னை விட்டு விலகிவிடுவார்கள். அதனால் தான் அமீரின் காதலை ஏற்பதற்கு தயக்கமாக இருக்கிறது என்று கூறி வந்தார். இந்நிலையில் அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் நடன ஜோடிகள் நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்தனர். நடனம் என்றால் என்னவென்றே தெரியாத பாவனியை மிக கஷ்டப்பட்டு நடனம் ஆட வைத்தார் அமீர். இதனால் நெகிழ்ந்து போன பாவனி அமீரின் காதலை ஏற்றார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாவனி, இனி நம் வாழ்க்கையை தொடங்குவோம், ஐ லவ் யூ அமீர் என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்புடையவை  "தரமில்லாமல் பலர் விளையாடி வருகின்றனர்" செம்ம கடுப்பில் இருக்கும் கமல்.! ப்ரோமோ இதோ.!

திருமணத்திற்கு முன்பே அமீர் பாவனி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.! 3

விளம்பரம்

 

ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீர் காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு, அனுதாப ஓட்டுக்களை பெற முயற்சிக்கிறார், அப்போது தான் பிக்பாஸ் வீட்டில் நாட்களை ஒட்டி விட முடியும் என்பதால் தான் பாவனியை காதலிப்பதாக நாடகமாடி வருகிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் அமீர் உண்மையிலேயே பாவனியை தீவிரமாக காதலித்து வருகிறார். அவரின் காதல் உண்மையானது என்பது பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சி போதே தெரிந்தது. தற்போது இருவரும் சேர்ந்து அவுட்டிங் செல்வது, டேட்டிங் செல்வது என்று மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நேற்று அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

விளம்பரம்

திருமணத்திற்கு முன்பே அமீர் பாவனி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.! 5

அதில் அமீர் மட்டும் பாவனி இருவரும் ஆடி கார் ஒன்றை புதிதாக வாங்கி இருக்கின்றனர். அந்த காரின் முன்பாக அமீரும் பாவனியும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அவர்களை வாழ்த்தி இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள், அதேபோல் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தங்களது ஆவலை கமெண்ட் ஆக பதிவு செய்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஆடிட்டர் கொண்டு வந்து கொடுத்த கோப்புகள்.! உடைந்து போய் அழுத ஒட்டுமொத்த குடும்பம்.!

திருமணத்திற்கு முன்பே அமீர் பாவனி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.! 7

விளம்பரம்

Leave a Comment